நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டம்: பால் உற்பத்தியாளர் சங்கம்
திட்டமிட்டப்படி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
திட்டமிட்டப்படி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை முதல் திட்டமிட்டப்படி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.