ஹாலோ பிளாக் இயந்திரத்தில் சிக்கிய பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கீழப்பனையூரில் ஹாலோ பிளக் இயந்திரத்தை சுத்தம் செய்த போது, அதில் சிக்கி காயமடைந்த பெண் தொழிலாளி வியாழக்கிழமை இரவு பலியானார்.
கோட்டூர் காவல் சரகம் கீழப்பனையூர் கிராமத்தில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தாஸ் மகன் செபஸ்டின் என்பவர் இன்டெர் லாக்கிங் ஹாலோ பிளாக் தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
ஹாலோ பிளாக் தயார் செய்யும் இடத்தில் கீழப்பனையூர் குடியானத் தெரு குமார் மனைவி வனிதா (43) என்பவர் வேலைப் பார்த்து வந்துள்ளர்.
வியாழக்கிழமை மாலை வேலை முடிந்து, வனிதா கலவை இயந்திரத்தை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக கலவை இயந்திரத்தின் உள்ளே வனிதாவின் கால் மாட்டியதல் பலத்த காயம் அடைந்த வனிதாவை, அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு!
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.