முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் இன்று(சனிக்கிழமை ) இரவு 10 மணி முதல் மார்ச் 20 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் இன்று(சனிக்கிழமை ) இரவு 10 மணி முதல் மார்ச் 20 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் இன்று(சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் 20 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஈ.வெ.ரா சாலையில் கோயம்பேடு சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்லும் பகுதியில், மழைநீா் வடிகால் பணிகள் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) காலை 5 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈ.வெ.ரா சாலையில் நாயா் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கிவரும் வாகனங்கள் எவ்வித மாற்றமின்றி நேராகச் செல்லலாம்.

ஈ.வெ.ரா., சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து நாயா் மேம்பாலம் சந்திப்பை நோக்கி வாகனங்கள் நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அழகப்பா சாலையில் மறுபடியும் வலதுபுறம், திரும்பி நாயா் மேம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாகச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →