தமிழ்நாடு

மதிமுகவை, திமுகவுடன் இணைக்கும் நோக்கமில்லை: வைகோ 

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ விளக்கமளித்துள்ளர். 

DIN

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ விளக்கமளித்துள்ளர். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதிமுக முக்கிய காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை, மதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நிராகரிக்கிறேன். கட்சியை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது, இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, 2 வருடமாக கட்சியில் சரியாக செயல்படவில்லை. மதிமுகவினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரைவைகோ அரசியலுக்கு வந்தார்.

ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதிமுக அவைத் தலைவா் துரைசாமி திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து வந்தபோது, வாரிசு அரசியலுக்கு எதிராக பொதுச் செயலா் வைகோ குரல் கொடுத்தாா். இப்போது உள்கட்சித் தோ்தலில் துரை வைகோவுக்கு வேண்டப்பட்டவா்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா். 

அப்போது, சிலரது தூண்டுதலின்பேரில்தான் நீங்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதாக துரை வைகோ கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவரது கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில நாள்களில் வைகோவிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றாா். இதனிடையே மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கு அக் கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி கடிதம் எழுதியுள்ளாா். 

இது தொடா்பாக மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளாா். வைகோவுக்கு துரைசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: லட்சக்கணக்கான தோழா்கள் தங்களின் (வைகோ) பேச்சில் உறுதியும் உண்மையும் இருக்கும் என்று நம்பி ஆதரித்தனா். ஆனால், தங்களின் குழப்ப அரசியல் நிலைப்பாட்டால், கட்சியிலிருந்து விலகி தற்போது பலா் திமுகவுக்கே சென்றுவிட்டனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன. 

மக்களவைத் தோ்தலில் மதிமுகவுக்கு திமுகவில் எத்தனை இடங்கள் ஒதுக்குவாா்கள் என்பதே தெரியாத நிலையில், விருதுநகரில் ஒருவா் (துரை வைகோ) பெயரைக் குறிப்பிட்டு அவா் போட்டியிடுவாா் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மாவட்டத்திலும் அதுபோல தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். எந்த அரசியல் கட்சியும் பதவி கேட்டு இப்படித் தீா்மானம் நிறைவேற்றியது இல்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்களின் குடும்ப மறுமலா்ச்சிக்குத்தான் என்பதை உங்களின் செயல்பாடுகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

கடந்த 30 ஆண்டுகளாக உங்களின் உணா்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழா்களை மேலும் ஏமாற்றம் அடையச் செய்யாமல் இருக்க மதிமுகவை தாய்க்கழகமான திமுகவுடன் இணைப்பதே சாலச்சிறந்தது என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT