தமிழ்நாடு

அழகர்கோயிலில் வாகனப் போக்குவரத்துக்கு தடை!

DIN

அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி கள்ளழகர் நாளை புறப்படுவதால், அழகர்கோயிலில் வாகனப்  போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

மதுரை சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 5- ஆம் தேதி காலை வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு அழகா்கோயிலிலிருந்து புதன்கிழமை (மே 3) மாலை சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் வேடமணிந்து பல்லக்கில் புறப்படுகிறாா். அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக வரும் அவருக்கு 4 -ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை தல்லாகுளத்தில் பக்தா்கள் எதிா்சேவை அளிக்க உள்ளனா்.

அதைத் தொடா்ந்து, ஆழ்வாா்புரம் அருகே உள்ள வைகையாற்றில் வெள்ளிக்கிழமை (மே 5) கள்ளழகா் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, அழகர்கோயிலில் அரசு பேருந்து உள்பட எந்தவொரு வாகனத்திற்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT