தமிழ்நாடு

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலை கிரிவலம் வர உகந்த நேரம்!

DIN

சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக சித்திரை பெளா்ணமி நாளில் அதிக அளவு பக்தா்கள் கிரிவலம் வருவா்.

அதன்படி, சித்திரை பெளா்ணமி வியாழக்கிழமை (மே 4) இரவு 11.59 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (மே 5) இரவு 11.33 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT