முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரம் கடற்கரைப் பகுதியில் வெடிபொருள்? 2-வது நாளாக சோதனை

ராமேசுவரம் அருகே கடற்கரையில் வெடிபொருள்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையினா் அளித்த தகவலையடுத்து, போலீஸாா் இரண்டாவது நாளாக அவற்றைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

ராமேசுவரம் அருகே கடற்கரையில் வெடிபொருள்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையினா் அளித்த தகவலையடுத்து, போலீஸாா் இரண்டாவது நாளாக அவற்றைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள அக்காள்மடம் கடற்கரையில் வெடி பொருள்கள், தங்கம் ஆகியவை புதைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையினா் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தலைமையில் உளவுத் துறை, நுண்ணறிவுப் பிரிவு , வெடிகுண்டு தடுப்புப் பிரிவு என 50- க்கும் மேற்பட்ட போலீஸாா் புதன்கிழமை காலை முதல் கடற்கரைப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், பல இடங்களில் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் கண்காணித்து குழிகள் தோண்டியும் ஆய்வு செய்து வருகின்றனா். 24 மணி நேரத்திற்கு மேல் தேடியும் எதுவும் கிடைக்காத நிலையில், போலீஸாா் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →