தமிழ்நாடு

நாமக்கல்: மாநில அளவில் ஒரே திருநங்கை மாணவி தேர்ச்சி

பிளஸ் 2  பொதுத்தேர்வில், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற திருநங்கை மாணவி 337 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

DIN

நாமக்கல்: பிளஸ் 2  பொதுத்தேர்வில், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற திருநங்கை மாணவி 337 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழகம்  முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. நாமக்கல்  மாவட்டத்தில் தேர்வில் 96.94 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாநில அளவில் ஒன்பதாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் பிடித்துள்ளது.

இங்கு தேர்வு எழுதிய 18,228 பேரில், 17,670 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.13 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.71 சதவீதமாகும்.

பள்ளிபாளையம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதிய திருநங்கை மாணவி ஜி. ஸ்ரேயா 337 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் தமிழக அளவில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி. இவர் மதிப்பெண்கள் விவரம்: தமிழ் - 62, ஆங்கிலம் - 56, பொருளியல் - 48, வணிகவியல் - 54, கணக்குப் பதிவியல்  - 58, கணினி பயன்பாடு - 59, மொத்தம்- 337.

மாணவி ஸ்ரேயாவை பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி மற்றும் இதர வகுப்பு ஆசிரியர்கள் பாராட்டி இனிப்புகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி கட்டண குறைப்பு: உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு

நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சருக்கு கோரிக்கை மனு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு; அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்ப்பு

போலி ஆவணங்கள்: வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு வந்தவா் கைது

SCROLL FOR NEXT