முகப்பு
தமிழ்நாடு

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 9 மே, 2023 at 8:52 AM
கோப்புப்படம்
பகிர்:

திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

இயற்கை உபாதை கழிக்க சென்றபோது கைவிடப்பட்ட குவாரியின் நீரில் மூழ்கி இறந்த 3 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மல்லிகா(65), ஹேமலதா(16), கோமதி(13) மூவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பார்வதி அகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.