பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு? தமிழகத்தில் என்ஐஏ சோதனை
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இருப்பிடங்கள் உள்பட தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் பெரம்பூர் அடுத்த ஓட்டேரி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருவதாகவும், மதுரையில் நெல்பேட்டை, தெப்பக்குளம் பகுதிகளிலும் சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல், தேனி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், அதே நேரத்தில் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.