தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சர்!

பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசருக்கு பதில், டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நாளைமறுநாள் (மே 11) காலை பதவியேற்கவுள்ளார். 

DIN


தமிழக சட்டப்பேரவையில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசருக்கு பதில், டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நாளைமறுநாள் (மே 11) காலை பதவியேற்கவுள்ளார். 

தமிழக அமைச்சரவையில் டெல்டா பகுதியிலிருந்து எந்தவொரு அமைச்சரும் இடம்பெறாத நிலையில், தற்போது டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். 

தமிழக அமைச்சரவையிலிருந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சா.மு. நாசருக்கு பதிலாக மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எந்தத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

2011ஆம் ஆண்டு முதல் மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக ஆர்பி ராஜா உள்ளார். இவர் டி.ஆர். பாலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT