மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4605கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4605கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3992கன அடியிலிருந்து 4,605 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 102.88அடியிலிருந்து 103.06அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.86 டிஎம்சியாக உள்ளது.