கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 14-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 14-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  

பாஞ்சாலங்குறிச்சியில் மே 12, 13 ஆகிய தேதிகளில் வீரசக்க தேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது. 

சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி ஆம்னி பேருந்துகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெளியூர்களுக்குச் செல்பவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

SCROLL FOR NEXT