முகப்பு
தமிழ்நாடு

அமைச்சரவையில் டிஆர்பி ராஜாவுக்கு 33-வது இடம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 11 மே 2023, 5:50 pm IST
பகிர்:

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு டிஆர்பி ராஜா புதிதாக இடம்பெற்றுள்ளார். 

மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள டிஆர்பி ராஜா, தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், புதிய அமைச்சரவை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் 28-வது இடத்திலிருந்தார். 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் அவருக்கு 10-வது இடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மொத்தமாக முதல்வருடன் சேர்த்து 35 அமைச்சர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.