முகப்பு
தமிழ்நாடு

சேலம் ரயில் நிலையத்தில் தவறி விழுந்தவரை மீட்ட ரயில்வே காவலர்

தவறி விழுந்த பயணியை, அங்குப் பணியிலிருந்த ரயில்வே காவலர் துரிதமாக மீட்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பயணியை, அங்குப் பணியிலிருந்த ரயில்வே காவலர் துரிதமாக மீட்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சேலம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10.25 மணியளவில் கரூரைச் சேர்ந்த ரவிக்குமார் தனது மனைவியுடன் பெங்களூர் -  நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் செல்லவிருந்தார்.

கரூர் செல்வதற்காக ஓடும் வண்டியில்  எஸ்-7 பெட்டியில் ஏற முயன்ற ரவிக்குமாரின் மனைவி கீழே விழுந்ததைப் பார்த்த கணவர் ரவிக்குமார் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சித்த போது தவறி நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் விழுந்தார்.

இதனை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் அஜித் துரிதமாக செயல்பட்டு, ரவிக்குமாரை தாங்கிப்பிடித்து, எந்தக் காயமும் இல்லாமல் மீட்டார். 
தற்போது இதன் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வேகமாக பரவி வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →