தமிழ்நாடு

திருப்பைஞ்ஞீலியில் திருக்கட்டமுது விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

திருப்பைஞ்ஞீலியில் அப்பர் பெருமானுக்கு திருக்கட்டமுது விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

DIN

திருப்பைஞ்ஞீலியில் அப்பர் பெருமானுக்கு திருக்கட்டமுது விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில். திருமண தடை நீங்கும் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் திருக்கட்ட முது வழங்கிய வரலாற்று நிகழ்வு இன்று நடைபெற்றது.

அப்பர் தாயுமானவரையும், ஜம்புகேஸ்வரரையும், திருப்பராய்த்துறை சிவனையும் தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றை கடந்து, திருப்பைஞ்ஞீலி வரும் பொழுது கடுமையான வெயிலில் அகோர பசியினாலும், நடை தளர்ந்து வருகின்ற நிலையுணர்ந்த சிவ பெருமான் தன் பக்தரான அப்பரின் பசியை தீர்க்க தோளில் கட்டு சாத மூட்டையுடன், அந்தணர் போல் வேடம் பூண்டு அப்பரை எதிர்கொண்டு அழைக்கிறார். 

அந்தணர் வேடம் பூண்ட சிவபெருமான் அப்பர் வெயிலின் கொடுமை தாங்க முடியாத நிலை கண்டு நிழல் தரும் மரங்களையும், குளத்தையும் தோன்ற செய்து அப்பரை மரத்தின் நிழலில் அமரச் செய்து தான் கொண்டு வந்த கட்டு சாதத்தை உண்ணும் படி கூறினர். இதனை தொடர்ந்து திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் அப்பர் பெருமானுக்கு காட்சி தருகிறார்.  இத்தகைய வரலாற்று நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயிலிருந்து அப்பர் பெருமான்.ஞீலிவனேஸ்வரர் கட்ட முது வழங்கிய இடத்திற்கு  கயிலாய வாத்தியங்கள் முழங்க வழி நடை உபயங்களை கண்டருளிய பின் பதிகம் பாடப்பட்டு அப்பர் பெருமானுக்கு பொதி சோறு (திருக்கட்டமுதை) வழங்கினர்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT