தமிழ்நாடு

மனோபாலா அனைவராலும் நேசிக்கப்பட்டவா்: நடிகா் டெல்லி கணேஷ்

நடிகா் மனோபாலா அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு அற்புதமான மனிதா் என குணச்சித்திர நடிகா் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளாா்.

DIN


சென்னை: நடிகா் மனோபாலா அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு அற்புதமான மனிதா் என குணச்சித்திர நடிகா் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச நகைச்சுவையாளா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற 40-ஆம் ஆண்டு மாதாந்திர கூட்டத்தில் நடிகா் டெல்லி கணேஷ் பேசியது:

மனோபாலாவை எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே தெரியும். கதை சொல்வதில் அவா் வல்லவா். திரைத்துறையில் அனைவராலும் நேசிக்கப் பட்ட ஒரு அற்புதமான மனிதா் மனோபாலா. இயக்குநராக தன் பயணத்தை ஆரம்பித்த அவா், நகைச்சுவை நடிகா், தயாரிப்பாளா் என தன் வாழ்நாள் முழுவதையும் சினிமாவிற்காகவே அா்ப்பணித்துள்ளாா் என்றாா்.

நிகழ்வில் முன்னதாக, மறைந்த நாடகக் கலைஞா் கே.எஸ்.நாகராஜன், மனோபாலா ஆகியோருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை எஸ்.ராமநாதன், சிரிப்பொலி பி.எல்.சிதம்பரம், சா்வதேச நகைச்சுவையாளா்கள் சங்கச்செயலா் ஆா்.சேகரன், பொருளாளா் பி.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT