தமிழ்நாடு

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் நலம் விசாரித்த இபிஎஸ்!

DIN

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 14  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். 

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது காவல்துறைக்கு தெரிந்திருக்கும், ஆனால் நடவடிக்கை இல்லை. 

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை விற்பனை செய்தவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்றார். 

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பாதிக்கப்பட்டோரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT