கோப்புப் படம் 
தமிழ்நாடு

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. 

DIN

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை மரக்காணத்தில் 14 பேரும்,  மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.    

இதையடுத்து, இன்று காலை சரவணன்(58), ராஜவேல்(49) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் மாலை இருவர் உயிரிழந்தனர். இதனால், மதுராந்தகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக இருந்தது. தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தற்போதைய நிலவரப்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT