ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

கள்ளச்சாராய பலிகள்: அறிக்கை கோரினார் ஆளுநர்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலரிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கோரியுள்ளார். 

DIN

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலரிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கோரியுள்ளார். 

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களையும் அறிக்கையாக ஆளுநர் கேட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள பெருங்கரணை கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க தலைமைச் செயலர் வெ.இறையன்புவிடம் ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுள்ளார். 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது எப்படி? விற்கப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது போன்ற விவரங்களையும் அறிக்கையாக சமர்ப்பிக்கக் கோரியுள்ளார். 

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT