தமிழ்நாடு

புதுச்சேரி: 10ம் வகுப்பில் 91.05% தேர்ச்சி!

DIN

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.05 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது.

புதுச்சேரியில் 88.85 சதவிகித மாணவர்களும், 93.30 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 42.42 சதவிகிதமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் திடீர் மழை!

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

SCROLL FOR NEXT