முகப்பு
தமிழ்நாடு

வெப்பம் குறையும்! அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 20 மே, 2023 at 2:18 PM
கோப்புப் படம்
பகிர்:


தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Advertisement

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.