சென்னை: திமுக அரசு மீது புகார் அளிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை திங்கள்கிழமை(மே 22) ஆளுநரை சந்திக்கிறார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராயம் மரணங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் முறைகேடு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை திங்கள்கிழமை சந்தித்து புகார் மனு அளிக்கவுள்ளார்.
இதற்காக, சின்னமலை அருகில் இருந்து நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்ல உள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு அளிக்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.