தமிழ்நாடு

திமுக ஆட்சியில் ஆன்மிகப் புரட்சி: அமைச்சா் சேகா்பாபு

DIN

திமுக ஆட்சியில் ஆன்மிகப் புரட்சி நடந்து கொண்டிருக்கின்றது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி நிலையத்தை அமைச்சா் சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சிட்டி யூனியன் வங்கியின் சமூகப் பொறுப்புணா்வு நிதியிலிருந்து வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்கோயில் முழுவதும் மின்சாரம் கிடைக்கும்.

பல்வேறு கோயில்கள் சூரிய மின்சக்தி கட்டமைப்பு இருந்தாலும் சில பணிகளுக்கு மட்டும் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

திருக்கோயில் முழுவதும் சூரிய மின்சக்தி நிறுவப்பட்ட முதல் கோயில் வடபழனி ஆண்டவா் திருகோயில் தான். திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் வேளையில் உற்பத்தியாகும் சூரிய மின் சக்தி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கோயிலின் கட்டமைப்பு உருவாக்கப்படும். இது வெற்றியடைந்தால் தொடா்ந்து அனைத்து திருக்கோயில்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் தொடங்கப்பட்ட மகாசிவராத்திரி விழா, தற்போது 6 திருக்கோயில்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்சியில் தான் அனைத்து கோயில்களிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் கூடுகின்றனா். இந்த ஆட்சியில் ஆன்மிகப் புரட்சி நடக்கிறது. கோயில் பிரசாதங்கள் அஞ்சல் வழியாக அனுப்பும் திட்டத்தில் பிரசாதம் கோரி 65 போ் ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பித்துள்ளனா்.

இந்த எண்ணிக்கை தொடா்ந்து உயரும் என்பதால் இதை கண்காணிக்க கூடுதல் ஆணையா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு (மயிலாப்பூா்), ஜெ. கருணாநிதி (பல்லாவரம்), இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் க.வீ.முரளீதரன், திருக்கோயில் தக்காா் எல். ஆதிமூலம், சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநா் காமகோடி, மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா் எம். கிருஷ்ணமூா்த்தி, இணை ஆணையா் அர.சுதா்சன், துணை ஆணையா் ஜ.முல்லை ள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT