தமிழ்நாடு

கள்ளச்சாராய வழக்குகள்: சிபிசிஐடி-யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

DIN

கள்ளச்சாராய வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.    

இதில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் தற்போது 40 பேர் வரையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 23 ஆக உள்ளது. 

முன்னதாக, மரக்காணத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சிபிசிஐடி டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியும் செங்கல்பட்டு அதிகாரியாக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி கோமதியிடம் இவ்வழக்கு தொடர்பான வழக்கு தொடர்பான ஆவணங்களை  ஒப்படைத்தார்.  ஆவணங்களின் அடிப்படையில் விரைவில் சிபிசிஐடி விசாரணை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT