தமிழ்நாடு

பொது சுகாதார இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை பொது சுகாதார இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதுநிலை பொது சுகாதார இதழியல் பட்டயப் படிப்பானது ஓராண்டு காலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இதழியல் துறையில் அனுபவம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் படிப்பின் கீழ், மொத்தம் 3 தாள்களுக்கான தோ்வுமுறை உள்ளது. அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சாா் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் இணையதள முகவரியிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT