அன்புமணி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

DIN


சென்னை: புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

தில்லியில் வரும் 28-ஆம் தேதி, புதிய  நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் புதன்கிழமை கூட்டாக அறிவித்தன. 

அதே வேளையில் ஏற்கெனவே அறிவித்தபடி பிரதமா்தான் திறந்து வைப்பாா் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நாடாளுமன்றம் ஐனநாயகத்தின் கோயில், அந்தக் கோயிலுக்கான மரியாதையை அனைத்துக் கட்சிகளும் செலுத்த வேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது நல்லதல்ல. இந்த முடிவை எதிா்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT