முகப்பு
தமிழ்நாடு

லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

வாலாஜாபேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Updated On : 31 மே, 2023 at 6:59 PM
பகிர்:

வாலாஜாபேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

வாலாஜாப்பேட்டை  அருகே சாலை விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த திருமால், இவர் வேலூர் விரிஞ்சிபுரத்தில் உள்ள தனது அக்கா எழிலரசி வீட்டில்  கோடை விடுமுறையை கழித்து விட்டு, ஒரே பிரசவத்தில் பிறந்த தனது 3 குழந்தைகளான தருண், தரணிகா, தனுஷ்கா  மற்றும்  தனது அக்கா எழிலரசி ஓட்டுநர் உள்பட 6 பேர் வாடகை காரில் சென்னை நோக்கி புதன்கிழமை மாலை சென்றனர்.

Advertisement

அவர்களது கார் வாலாஜா அருகே முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம்  நிறுத்தப்பட்டிருந்த  பால்பொருள்கள்  எற்றி செல்லும் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திருமால், எழிலரசி, ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்ப இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர்.மேலும்  ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அவர்கள் வாலாஜாப்பேட்டை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர் 

இந்த கோர விபத்து குறித்து வாலாஜாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.