தமிழ்நாடு

ஜூன் 5ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு!

மேட்டூர் அணை  ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் ஜூன் 5 ஆம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

DIN



சென்னை: மேட்டூர் அணை  ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் ஜூன் 5 ஆம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னதாக கூட திறக்கப்படும். சில நேரங்களில் காலதாமதமாகக் கூட திறக்கப்படும். 

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூா் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை அடுத்து,  ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணை  திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜூன் 11 ஆம் தேதி சேலத்திற்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணை திறந்து வைக்க உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் புதிதாக ரூ. 1,000 கோடியில் திட்டங்களை அறிவிக்க உள்ளாா் என்று தகவல்கள் வெளியானது. 

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஜூன் 5 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆய்வு செய்கிறார்.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT