முகப்பு
தமிழ்நாடு

நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2.லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:01 PM
பகிர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2.லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டம், முனியப்பன் கோவில் காட்டுவளவு, விருத்தாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரணிதரன்(15) மற்றும் கரட்டுப்பட்டி நங்கவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிரித்திஷ்(8) ஆகிய இரண்டு சிறுவர்களும் இன்று (30-5-2023) விருத்தாசம்பட்டி கிராமம், முனியப்பன் கோவில் காட்டூர் ஏரியில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →