சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை: அமைச்சர் சேகர்பாபு
கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
ரோப்கார் சேவைகளை பொருத்தவரை திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயில்களில் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கப்படவுள்ளது. அதேபோல், அய்யர் மலை ரோப்கார் சேவையும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் 7 பிணைக்கைதிகள் பலி: ஹமாஸ்
வயதானவர்கள் மலைச் சார்ந்த கோயில்களுக்கு செல்ல தேவையான வசதியை இந்து சமய அறநிலையத்துறை செய்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.