முகப்பு
தமிழ்நாடு

வன்னியர் உள்இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:15 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை கடந்தாண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில்,  வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக் கோரி பாமகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வன்னியர் உள்இடஒதுக்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.