முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. 

இதையடுத்து, அடுத்த 3 மணி நேரத்துக்கு, அதாவது இன்று பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →