முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழை தொடரும்!

சென்னை, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழை தொடரும்!

சென்னை, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி இன்று பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி, நவ.4 ஆம் தேதி கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

நவ.5, 6 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →