ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

நாகா மக்கள் குறித்த பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு!

நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், கண்ணியமானவர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

DIN

நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், கண்ணியமானவர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

நாகா இன மக்கள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 
நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. 

மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT