அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 
தமிழ்நாடு

திமுகவை கண்டித்து மாட்டு வண்டியில் சென்ற ஜெயக்குமார்! வைரல் விடியோ

டீசல் விலையை குறைக்காததால் திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாட்டு வண்டியில் பயணம் செய்த விடியோ வைரலாகி வருகிறது.

DIN

சென்னை: டீசல் விலையை குறைக்காததால் திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாட்டு வண்டியில் பயணம் செய்த விடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ. 5 மற்றும் டீசல் விலை ரூ. 4 குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை மட்டும் ரூ. 3 குறைத்து உத்தரவிடப்பட்டது. டீசல் விலை குறைக்கவில்லை.

இந்த நிலையில், டீசல் விலையை குறைக்காத திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை சாலையில் ஜெயக்குமார் மாட்டு வண்டி ஓட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT