தமிழ்நாடு

கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சென்ற வேன் விபத்து: தொண்டர்கள் 7 பேருக்கு பலத்த காயம்!

DIN

சங்ககிரி: சங்ககிரி அருகே லாரியின் பின்புறத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சென்ற ஒரு பெண் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் தேசியநெடுஞ்சாலையில் கோவையிலிருந்து சென்னைக்கு சென்று சுற்றுலா வேன் எதிர்பாரதவிதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மோதியதில் சுற்றுலா வேனில் பயணம் செய்த மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள்  7 பேர் பலத்த காயமடைந்தனர். 

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா நவம்பர் 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (இன்று) சென்னையில் கொண்டாடப்படுவதையையொட்டி, அவ்விழாவில் கலந்து கொள்ள அக்கட்சியைச் சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு, வட்டச் செயலாளர் வாசுதேவன் ஆகியோர்  தலைமையில் 19 பேர் கோவையிலிருந்து சுற்றுலா வேனில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர்.  

அப்போது, அவர்கள் சென்ற சுற்றுலா வேன் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து எதிர்பாரதவிதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சுற்றுலா வேன் ஓட்டுர் கோவை சங்கர் (35), கோவை புலியங்குளம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் மகன் மாரிமுத்து (44), ராஜ்குமார் மகள் மல்லேஸ்வரி (23), கருப்பையா மகன் பவன்சாய் (44), வீரபாண்டியன் மகன் வெங்கடேஷ் (26), அப்புசாமி மகன் வாசுதேவன் (46), பால்ராஜ் மகன் தீனதயாளன் (45) ஆகியோர் காயமடைந்தனர். 

இதில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநர் சேலம் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மல்லேஸ்வரி, வெங்கடேஷ் இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

மற்றவர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சங்ககிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். .

காயமடைந்தவர்களை சங்ககிரி வட்டாட்சியர்கள் கே.அறிவுடைநம்பி, ரமேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பியே.. நமீதா கிருஷ்ணமூர்த்தி!

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT