தமிழ்நாடு

வரும் 15-இல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு

DIN

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15- ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.


குறிப்பாக, தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமையும் பல்வேறு மாவட்டங்களுக்கு பலத்த மற்றும் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. 

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15 -ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயுமானவள்! அமலா பால்..

ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது?

SCROLL FOR NEXT