முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:20 AM
அசாரூதீன்
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் காதர் மகன் அசாரூதீன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று இரவு பேட்டையில் இருந்து அசாரூதீன் பேட்டையிலிருந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அசாரூதின் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.