கோப்புப்படம் 
தமிழ்நாடு

மழை எதிரொலி: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசரக் கடிதம்!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார். 

DIN

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் பேரிடர்களை எதிர்கொள்ள முறையான நெறிமுறைகளைக் கையாள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் இன்று கடிதம் எழுதியுள்ளார். 

மழைக் கால பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பது, பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT