முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (பிற்பகல் 1 மணி வரை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →