தமிழ்நாட்டின் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்து நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
மிக கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு அபாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஏற்படும் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ரூபாயை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒதுக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,
மின்விநியோக பாதிப்பு தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பருவமழை பெய்து வரும் நிலையில், மின்சாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.