புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராயினர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் 2021 இல் வழக்குப் பதிவு செய்து கடந்த மே 22-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.