தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

DIN

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை (நவ. 15) காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதை திங்கள்கிழமை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று என்.சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக விசாரித்து வந்தனர்.

சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.

சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை உள்ள அவரது இல்லத்திலும் பின்னர் மதியம் 3 மணிக்கு தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது. நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்துள்ளது.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT