தமிழ்நாடு

சங்கரய்யா இறுதி நிகழ்ச்சிகள் நாளை நடைபெறும்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

DIN


முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை(நவ.16) நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான  என்.சங்கரய்யா (102) வயது உடல் நலக் குறைவின் காரணமாக புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில்  காலமானார்.

அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது. 

இறுதி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை காலை(நவ.16) 10 மணியளவில், மார்க்சிஸ்ட் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும். கட்சியின் அனைத்து கிளைகளும், கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், ஒரு வார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கப்படும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT