தமிழ்நாடு

பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

DIN

தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
 
சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இ-சேவை மையங்களில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் குவிந்தனர். சான்றுகள் கிடைப்பதில் கால தாமதம், சர்வர் பிரச்னை போன்ற காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்பிறகு பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT