தமிழ்நாடு

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

DIN

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது.

தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. விசாகபட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

மேலும், வலுபெற்று நவம்பர் 18-ஆம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே சுமார் 55 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 19-ஆம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT