கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத், ககன் போத்ரா உள்ளிட்ட 23 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

நடப்பாண்டில் கடந்த 11 மாதங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் 402 பேரும், கஞ்சா, போதைப்பொருள் விற்பனையில் 74 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT