தமிழ்நாடு

கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து பாசன சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பு

DIN

அம்பாசமுத்திரம்: கடனாநதி மற்றும் ராமநதி அணைகளிலிருந்து பாசன சாகுபடிக்காக இன்று(வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடனாநதி அணை பாசனத்திற்குள்பட்ட அரசபத்துக்கால், வடகுறுவபத்துக் கால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால் மஞ்சம்புளிக் கால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களில் சாகுபடி பணிகளுக்காக கடனாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நவ. 17 முதல் 2024 மார்ச் 31 வரை 136 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடிக்கு மிகாமல் பாசனப் பருவகாலத்தின் மொத்த தண்ணீர் தேவை அளவான 1553.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். 

இதன்மூலம் அரசபத்துகால், வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால் மற்றும் காங்கேயன்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் 9923.22 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். 

 கடனாநதி அணையிலிருந்து மதகு வழியே வெளியேறும் தண்ணீர் 

ராமநதி அணை பாசனத்திற்குள்பட்ட வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் 4943.51 ஏக்கர் நிலங்களில் பாசன சாகுபடிக்காக ராமநதி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நவ. 17 முதல் 2024 மார்ச் 31 வரை 136 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடி அளவுக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தண்ணீர் தேவை அளவான 823.91 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். 

 ராமநதி அணையிலிருந்து மேல்மட்ட மதகு வழியே வெளியேறும் தண்ணீர் 

இதன் மூலம் ராமநதி அணைப் பாசனத்திற்குள்பட்ட வடகால், தென்கால், புதுக்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றின் கீழ் பாசன வசதி பெறும் 4943.51 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநிலக்கோட்டஉதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவிப் பொறியாளர்கள் பேட்டர்சன் குழந்தைராஜ், கணபதி, அந்தோணி, கடனா விரிவாக்கக் கால்வாய்ப் பாசனத் தலைவர் மாதவடியான், விவசாயிகள் கண்ணன், குணசேகரன், வேலாயுதம், வேலு, சுப்பிரமணியன்,  தங்கதுரை அணை ஊழியர்கள் ஜோசப், பாக்யராஜ், துரைசிங், பார்த்திபன், வெங்கடேஷ், கருப்பசாமி, முருகையா, நாகூர் மைதீன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT