தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறப்பு: மின் உற்பத்தி தொடக்கம்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது.

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது. அதன் காரணமாக லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில்  மின் உற்பத்தி தொடங்கியது.

முல்லைப்பெரியாறு அணையில் சனிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 133.30 அடியாக இருந்தது. அணைக்குள் நீர் இருப்பு 5,429.30 மில்லியன் கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1050 கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2000.83 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.

14 நாள்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.70 அடியாக இருந்த நிலையில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1000 கன அடி திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. 

கடந்த நவ. 5 இல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது, அதாவது விநாடிக்கு 105 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. அதனால் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 14 நாள்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை மின்சார உற்பத்தி தொடங்கியுள்ளது.

அணை நிலவரம்

அணையின் நீர்மட்டம் 133.70 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 5562.90 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,208.64 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேக்கடி ஏரியில், பெரியாறு அணையில் மழை பெய்யவில்லை. 

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரியில் முறைகேடாக மணல், கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

சவூதியில் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்

நெல்லை கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

நெல்லையில் கல்குவாரிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

கணவரை கொன்றவா்களால் மகனுக்கும் ஆபத்து: ஓய்வுபெற்ற எஸ்.ஐ மனைவி முதல்வருக்கு வேண்டுகோள்

SCROLL FOR NEXT